தங்கம் விலை இப்படியே உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? இந்த பேச்சு தான் கடந்த சில மாதங்களாக எங்கும் ஒலித்து வருகிறது.
நாம் அனைவருக்கும் தங்கம் என்பது அத்தியாவசிய தேவையான மாறிவிட்டது. அதாவது சேமிப்பை தங்கம் மூலமாகத்தான் நிறைய பேருக்கு செய்கிறார்கள். இது மட்டும் அல்லாமல் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்க நகைகள் இல்லாமல் அந்த விசேஷமே இல்லை.
எந்த ஒரு திருமணமும் தங்கம் இல்லாமல் நடப்பதில்லை; தாலியில் தங்கம், கழுத்தில் தங்கம், கையில் தங்கம் என எங்கு பார்த்தாலுமே நகைகள் தங்கம் சார்ந்த பொருட்கள் இல்லாமல் எந்த விசேஷமும் நடப்பதில்லை. அப்படி இருக்கையில் தங்கம் விலை ஏறினால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும்.
கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் ஒரு பவுன் ரூபாய் 50,000 என்ற உச்சத்தை தங்க விலை எட்டியது அப்போதே இவ்வளவு விலை என பேசப்படும் நிலையில் அதோடு நிக்காமல் மேலும் விலை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய விலை உயர்வு என்ற அடிப்படையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை கடந்த கடந்து வந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டுமே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டுமே விலை உயராமல் ஒரு பவுன் ரூபாய் 55 ஆயிரம் முதல் ரூபாய் 56 ஆயிரம் வரையில் நிறையாக இருந்தது.
அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் ஏற்றத்தை நோக்கி தங்கம் விலை பயணித்தது. அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 60 ஆயிரம் என்ற நிலையையும் அடைந்தது.
அதனை அடுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான நாட்களில் விலை உயர்வே இருந்தது. இதனால் கடந்த மாதம் மார்ச் 14ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 65 ஆயிரத்தை தொட்டது.
இதற்குப் பிறகாவது விலை குறையுமா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்த நிலையில் இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை யாரும் கடிவாளம் போட முடியாது உச்சத்திலேயே தொடர்ந்து பயணிக்கும் என சொல்லப்படுகிறது.
தங்க விலை உயர்வுக்கு என்ன காரணம்?
அதைக் ஏற்றது போல தங்கம் விலை அதிரடியாக உயருவதும் சற்று இறங்குவதுமாகவே இருக்கிறது அமெரிக்க ஜனாதிபதி ஏற்றம் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த நாலாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை குறைந்து வருகிறது.
பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இதனை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடு என உயர தொடங்கி இருக்கிறது.
அதன்படி கடந்த மூன்று நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது அதாவது கடந்த ஒன்பதாம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் எட்டு கிராமுக்கு ரூபாய் 155 பவுனுக்கு ரூபாய் 1450 உயர்ந்துள்ளது அன்றைய தினம் ஒரு கிராம் பவுன் ரூபாய் 67,250 விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் கிராமுக்கு ரூபாய் 150 பவுனுக்கு ரூபாய் 1200 உயர்ந்து ஒரு பவுன் ரூபாய் 68,450 க்கு வியாபாரம் ஆனது இதுதான் இதுவரை தங்கத்தின் உச்சபட்ச விலை ஆக எடுததது ஆனால் அதிரடியாக நேற்று கிராமுக்கு ரூ.185 பவுனுக்கு ரூபாய் 1480 பேருந்து ஒரு கிராம் ரூபாய் 845க்கும் ஒரு பவுன் ரூபாய் 69 ஆயிரத்து 960 க்கும் விற்பனை செய்யப்பட்டது இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்துவிட்டது.
அதாவது ஒரு பவுன் ரூபா 70 ஆயிரத்தை நெருங்கி விட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூபாய் 520 பவுனுக்கு ரூபாய் 4560-ம் அதிகரித்துள்ளது இதே வேகத்தில் சென்றால் தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 80 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
குறிப்பாக, நமது மக்கள் பயன்படுத்துவது 22 கேரட் தங்கம் மட்டும்தான்; 24 கேரட் தங்கம் சுத்தமான தங்கம் என்று கூறினாலும் அந்த 24 கேரட் தங்கத்தை நகைகள் செய்ய பயன்படுத்த முடியாது. அதனுடன் வேறு சில உலோகங்களையும் கலந்து தான் தங்க நகைகள் செய்யப்படுகிறது. ஆதலால் எந்த தங்க நகைகளும் சுத்தமான தங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி தயாரிக்கப்படுவதில்லை.
இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆதலால் தங்கம் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான தேவையாக மக்களுக்கு இருக்கிறது.
0 கருத்துகள்